Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

கரூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்து நீர்மோர் மற்றும் குளிர்ச்சியான பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தமிழகத்தில் கடும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 105 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி பொதுமக்கள் அவதியடைந்து

வருகின்றனர்.

இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கரூர் மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை எம்.எல்.ஏவும் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

நீர்மோர் பந்தலில் பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், குடிநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட

குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வெயிலில் இருந்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ, குளித்தலை எம்.எல்.ஏ சூரியனூர் சந்திரன், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!