Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்..பயிர் கடன் தள்ளுபடி முறையாக தள்ளுபடி செய்யவில்லை.. குற்றாசாட்டு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பிரேமி (பொ) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை ஆண்டிமடம், உடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

அப்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள விவசாய பயிர் கடன் தள்ளுபடி முறையாக அறிவிக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதி படி அறிவிக்காமல், பாரபட்சமாக அறிவித்து உள்ளது

விவசாயிகளாகிய எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்து, தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யும் விதமாக கண்ணில் கருப்பு கொடி கட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் பங்கேற்ற சில நிமிடங்களிலேயே கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவிக்கையில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தலுக்கு முன்பாக அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கு அறிவிக்கவில்லை. அதற்கு மாற்றாக தரம் பிரித்து அறிவித்தது உண்மையிலே விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே தமிழக முதல்வர் இதனை மறு பரிசீலனை செய்து மீண்டும் முறையாக அறிவிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அடுத்த கட்டமாக விவசாயிகளை திரட்டி தமிழக முழுவதும் கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.
முன்னதாக அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!