மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில்
குருப்பெயர்ச்சி விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை காசாங்குளம் விசாலாட்சி உடனுறை அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள
ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இன்று காலை சரியாக 11 மணிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் திரளானோர் பக்தி பரவசத்துடன்
ஸ்ரீ குருபகவானை வழிபட்டனர். முன்னதாக ஸ்ரீ குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த
குருப்பெயர்ச்சி விழாவில் பரிகார ராசிகளான மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் ஸ்ரீ குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் மற்ற ராசிக்காரர்களும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
