Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உள்ளூர் விடுமுறை + ஊழியர்கள் போராட்டத்தால் எல்லையோர கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

கரூர் மாநகரில் பிரசிதிபெற்ற மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுவதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரள்வார்கள் என்பதால் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கமேடு, உழவர் சந்தை, பாலம்மாள் புரம், தாந்தோனிமலை, ராயனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த 5 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லையான வாங்கல் மற்றும் வேலாயுதம்பாளையம், கோவை சாலை உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் போது நீண்ட வரிசையில் நின்று மதுபான வகைகளை மதுப் பிரியர்கள் வாங்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

error: Content is protected !!