பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செண்டை மேளம் விண்ணை அதிர வைக்க இன்று வெகு விமரிசையாக நடந்தது – திரளான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சேண்டாகோட்டை கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

அதனைத் தொடர்ந்து செண்டை மேளம் விண்ணை அதிரவைக்க நாதஸ்வரம், மேளம் முழங்க கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம்வந்து அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். இவ்விழாவில் சேண்டாகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி காளியம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.
