Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புண்ணியமூர்த்தி. இவர்
திருச்சி ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.
இவரை திருச்சியில் பணியாற்றிய முன்னாள் ரெயில்வே அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது தாக்கியதாக கூறப்படுகிறது . இதில் பாதிக்கப்பட்ட புண்ணியமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னைக்கு சென்ற அந்த அதிகாரியை அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!