Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மே 7-ந்தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி வரை இருந்த நிலையில், முன்கூட்டியே ராஜினாமா செய்ததால் அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தவிர மற்ற அனைவரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். அவர்களை ஆதரித்து எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியாததால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வானார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டது.

error: Content is protected !!