தாய்லாந்து அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க மோதிரத்தில் தமிழர் பெயர் இடம்பெற்றுள்ளது. முதலில் அதிலிருந்த எழுத்துகள் ‘பிராமி’ என கூறப்பட்டன. ஆனால், அது இடவலமாக மாற்றி எழுதப்பட்ட ‘தமிழி’ எழுத்துகள்தான் என சிங்கப்பூர் ‘சார்’ குழுவின் ரஞ்சித்குமார் கண்டறிந்துள்ளார். அதில் வளமான மருத நிலத்தை சேர்ந்தவர் என்பதை குறிக்கும் ‘அளர் வைரதன்’ என்ற தமிழரின் பெயர் உள்ளதையும் உறுதி செய்துள்ளார்.
