Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை சில தனியார் நபர்கள் சட்ட விரோதமாக பதிவு செய்ததை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் காவல் துறை விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. நிலம் தொடர்பான சில வழக்குகள் இருப்பதை மேற்கோள் காட்டி, இந்த நிலத்தை யார் பதிய சொல்லி கேட்டாலும் அதனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே பழனி இணை ஆணையர் மூலம் பலமுறை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்துக்கு உட்பட்டு துரிதமாக எடுக்கப்படும் போது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகளை சார்ந்த சமூக வலைதள பக்கங்கள் மற்றும் சில மீடியாக்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் உறவினர்கள் என்றும், அமைச்சருக்கு தெரிந்தே தான் இந்த குற்றம் நடந்தது என்றும் தனக்கு எள்ளளவும் சம்மந்தம் இல்லாத விடயத்தில் அமைச்சர் பெயரை பொய்யாக வன்மத்துடன் இணைத்து பரப்பும் நபர்கள் மீதும், சமூக வலைதள கணக்குகள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் அமைச்சர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் பொய் செய்தி பரப்பியவர்கள் மீதும், இனி பரப்புவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!