Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நில மோசடி வழக்கு… கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிக்கை

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நில மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்ற பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டார் மீண்டும் வருகின்ற 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தற்போது கரூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், இன்று எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, நிலம் தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகக் கூறி, எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பினர் சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் அப்போதைய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் வழக்குப்பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜும் இன்று கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் ஜூலை 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!