கரூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ன 200-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது இந்த கடைகளில் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி

நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்ததால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் பிரிதிவிராஜ் உத்தரவின்பேரில், வருவாய் உதவி ஆணையர் ஹேமா தலைமையில், காவல்துறை

பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, குப்பை லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. மேலும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
