பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு, லால்குடி ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பினார்.
அமிர்த் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி, பயணிகள் வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் லால்குடி நிலையத்திற்கான பேருந்து இணைப்பு, ஆட்டோ கட்டணம் குறித்து விளக்கம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், லால்குடி நிலையத்தில் நுழைவு வளைவு, நடைமேடை மேம்பாடு, கழிப்பறை, அடையாள பலகைகள் பணிகள்

முடிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைய கட்டிடம், வெயிட்டிங் ஹால், விளக்கு, அணுகு சாலை பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த் பாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் லால்குடியும் ஒன்று என்றும் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ₹5,931 கோடி ஒதுக்கப்பட்டு, ₹5,198 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
