திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பலூன் ஊதிக்கொண்டிருந்தபோது அது வெடித்து தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் – சத்யா தம்பதியினரின் இரட்டை குழந்தைகளான சோம்நாத், சேஸ்நாத் ஆகியோர் நேற்று இரவு வீட்டில் பலூன் ஊதி விளையாடினர். அப்போது சோம்நாத் ஊதிய பலூன் வெடித்து தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டையில் சிக்கிய பலூன்.. மூச்சுத்திணறி 6வயது சிறுவன் பலி
