ஆடுதுறை பெருமாள் கோயில் கிராமத்தில் இறந்தவர்களின் உடலை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அடக்கம் செய்யும் அவலம்..
இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு அடக்கஸ்தலம் மற்றும் உடலை எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென கிராம பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம், ஆடுதுறை பெருமாள் கோயில் பகுதியில் சுமார்

ஆயிரம் கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (55) என்பவர் இயற்கை எய்தினார். அந்தப் பகுதியில் சாலை வசதி சரியில்லாததால் உயிரிழந்தவரை சுமார் ஒரு கிலோ

மீட்டர் தூரம் தோளில் சுமந்து வந்து அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..
இதுபோன்று வயது முதிர்வின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணமாகவோ யாராவது உயிரிழக்க நேரிடும் நிலையில்..
இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சரியான மயான வசதி இல்லாததால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இறந்தவர்கள் உடல் மீது ஒன்றன் பின் ஒன்றாக வைத்து அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை நிலவி வருவதாகவும்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை என குற்றம் சுமத்தும் கிராம பொதுமக்கள்..
இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு முறையான அடக்கஸ்தலம் வசதிகள் செய்து தர வேண்டும். இறந்தவர்களின் உடலை சுமந்து செல்வதற்கு சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
