நேபாளத்தில் நடந்த விபத்தில் கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்களின் விவரம் தெரியாமல் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது
கும்பகோணம் கர்ண கொள்ளை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சாய்நாத் (73) இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி ஜெயலட்சுமி (64) மற்றும் இன்னும் திருமணம் ஆகாதநிலையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்களது ஒரே மகள் டாக்டர் கேதார கௌரி (32) ஆகிய 3 பேரும் கடந்த 23ஆம் தேதி கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலமாக நேபால் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு நடந்த விபத்தில் அவர்கள் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை விவரம் தெரியாமல் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் கும்பகோணத்தில் உள்ள அவர்களது வீடு பூட்டி கிடக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மூவரைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை என்றும் அவர்கள் மூவரும் நலமுடன் திரும்ப வேண்டும் என கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருவதாகவும் அவர்கள் பற்றிய தகவல்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
