சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள சூழலில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,571 கனஅடியில் இருந்து 6,702 கனஅடியாக உயர்ந்துள்ளது டெல்டா விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
