கோவை நவஇந்தியா பகுதியில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்ததில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் தீக்கிரையாகி சேதமடைந்தன. தொழிலாளர்கள் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில் இவ்விபத்து நேரிட்டதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த சிலிண்டர்களில் இருந்து தொடர்ந்து எரிவாயு கசிந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை நவஇந்தியா அருகே 7 சிலிண்டர்கள் வெடித்து விபத்து
