Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

20-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்களுக்கு வங்கதேசம் ஆர்டர்!

20-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்களுக்கு வங்கதேசம் ஆர்டர்!

சீனாவிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 20 முதல் 24 போர் விமானங்களை சீனாவிடமிருந்து வாங்கி, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தவணை முறையில் தொகையை செலுத்தி முடிக்க வங்கதேசம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சீனாவின் J-10CE ரக மல்டிரோல் போர் விமானங்களை ரூ.22,000 கோடிக்கு வாங்க, வரைவு ஒப்பந்தத்தை வங்கதேசம் இறுதி செய்து உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் சீனாவிலிருந்து தாக்குதல் ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களை வாங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து வாங்கப்படும் 20 விமானங்களில், 10 விமானங்கள் நேரடியாக விமானப்படையின் செயல்பாட்டுப் பிரிவுகளில் சேர்க்கப்படும். மீதமுள்ள 10 விமானங்கள் அவசரகால இருப்பு மற்றும் சிறப்புப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என வங்கதேச அதிகாரிகள் கூறி உள்ளனர். J-10CE ரக போர் விமானங்களின் விநியோகம் 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த 2025 நடைபெற்ற மோதலில், இந்திய ரஃபேல் விமானத்திற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய J-10 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டதால் அதற்கு முன்னுரிமை அளிப்பதாக வங்கதேச பிரதமரின் ஆலோசகர் சாஹித் உர் ரஹ்மான் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!