Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

FQL ஆன்லைன் மோசடி- ஏஜென்டுகள் 2 பேர் கைது

FQL ஆன்லைன் மோசடி- ஏஜென்டுகள் 2 பேர் கைது

FQL ஆன்லைன் மோசடி வழக்கில் சிவகங்கை மாவட்டத்தில் முகவர்களாக செயல்பட்ட வந்த இரண்டு பேரை மாவட்ட குற்றவியல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி விவகாரத்தில் 15க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ள நிலையில், தற்போது ஏஜென்டுகள் ரமேஷ், சதீஷ் ஆகிய இருவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை தலைமையாக கொண்ட FQL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் 1 லட்சம் செலுத்தினால் 45 நாட்களில் இரட்டிப்பு லாபம் எனக்கூறி ரூ.1,000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக காவல் காவல்நிலையங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடமும் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட காஞ்சிரங்கால், காளையார்கோவில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தொடர்ச்சியாக சிவகங்கை எஸ். பி அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஏஜென்டாக செயல்பட்டு வந்த ரமேஷ், சதிஷ் ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!