மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கேமரா வசதியுள்ள செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்ற தடை அமலில் உள்ள நிலையில்,
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும், அவருடன் வந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் செல்போன்களை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து, கோயிலுக்குள் செல்போனில் பேசிக்கொண்டு

இருக்கிறார்கள்.
10 நிமிடத்திற்கும் குறையாமல் வெளியில் வரிசையில் நின்று, கவுண்டரில் செல்போனை ஒப்படைத்து, அதற்கு ரூ5 கட்டணமும் செலுத்தி கோயிலுக்குள் வரும் மக்கள் எல்லாம் முட்டாள்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
