செங்கல்பட்டு: திருச்சியில் இருந்து சென்னை மார்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள புலிப்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 2 மணி அளவில் வேகமாக சென்றுகொண்டிந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றதது. இதனால் அந்த காரை பின் தொடர்ந்து வந்த 7 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்தில் சிக்கிய கார்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்தில் காரில் பயணம் மேற்கொண்டு வந்த அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பி உள்ளனர்.இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரும் நெரிசலை சரி செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய தென் மாவட்டங்களுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்தநிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
