Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பொது கழிவறை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது புங்கனூர் ராம்ஜி நகரை சேர்ந்த சுந்தரம் மனைவி ஜெயா (65) என்பவர் 40 கிராம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயாவை கைது செய்து அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்ட புங்கனூர் ராம்ஜிநகரை பகுதியை சேர்ந்த சசிகுமார் (48) மற்றும் சக்திவேல் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3,500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ஆகும்.

error: Content is protected !!