முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (79) காலமானார்.
இவர் சிவகங்கையில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மன்மோகன் சிங், அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் சுதர்சன் நாச்சியப்பன். இவர் மக்களவை உறுப்பினராக தமிழ்நாட்டில் 2004ல் இருந்து 2016 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் எம்பியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. வழக்கறிஞராகவும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார். சொந்த கிராமமான ஏரியூருக்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகிறது.
