மதுரையில் அமைச்சர் நிர்மல்குமாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை காண அரசு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என புகார் அளித்துள்ளனர். மதுரை கோயில் வாயில் முன் காத்திருந்த மக்கள் மீது புனித நீர் தெளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர் . பக்தர்கள் ஆவேசமடைந்த நிலையில் குடிநீரில் சிறிது புனித நீரை கலந்து போலீசார் மக்கள் மீது தெளித்தனர்.
