சென்னை அருகே உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் `TN 07 CM 2031′ என்ற பதிவெண் கொண்ட காரில் வந்து இறங்கினார். அவரது காரின் எண் பலகையில் இடம்பெற்றுள்ள ‘CM 2031’ என்ற குறியீடு, 2031 சட்டமன்றத் தேர்தலைக் குறிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தையும் அரசியல் விவாதங்களையும் தூண்டியுள்ளது.
