மதுரை அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் தலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அம்மாணவர், ரத்த வெள்ளத்தில் ஓடிச்சென்று அருகில் இருந்த கிராம மக்களிடம் தஞ்சம் புகுந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையில் அண்மைக்காலமாகத் தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
