தஞ்சையில் 6 இடங்களில் தடை செய்யப்பட்ட கிளாபத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் வீடுகளில் SIU (சிறப்பு உளவு பிரிவினர்) அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிதனியாக சோதனை நடந்து வருகிறது. தஞ்சை கீழவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட கிளாபத் இயக்கத்துடன் சிலர் தொடர்பில் இருந்து வருவதாக இஸ்லாமிய அடிப்படை வாதிகளை கண்காணித்து வரும் SIU (சிறப்பு உளவு பிரிவினர்) க்கு வந்த ரகசிய தகவலை அடுத்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தஞ்சை நகர டிஎஸ்பி சார்லஸ் மேற்பார்வையில்
காவல் ஆய்வாளர்கள் சுகுமார், செந்தில்குமார், விஷ்ணுபிரசாத் ஜெயந்தி முருகானந்தம் ஆகியோரது தலைமையில் ஜாகிர் உசேன் அப்துல்வர்க்கிஸ் உமர் முக்தர் யாசர் அப்துல்
சம்சுதீன் சேக் பரீத் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
