மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த தனியார் பயிற்சி வகுப்பைச் சேர்ந்த சுமார் 30 முதல் 40 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக திவேஆகர் கடற்கரைக்குச் சென்றிருந்தனர். கடலின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் தெரியாமல் ராட்சத அலைகளில் சிக்கி 8 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி மாணவர்களின் உடல்களை மீட்டனர்.
சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி
