Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக நலன் வேண்டி கும்பகோணத்தில் வெளிநாட்டவர் யாகம்!

தாய்வான் நாட்டில் மக்கள் அமைதி உடன் வாழ வேண்டியும்,இயற்கை பேரிடர்களில் இருந்து அந்த நாட்டு மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் கும்பகோணம் மகாமக குளக்கரை அருகில் அமைந்துள்ள அபி முகேஸ்வரர் ஆலயத்தில் தைவான் நாட்டு மக்கள் கலந்து கொண்ட மகா ருத்ர யாகம்.

கும்பகோணம் மகாமக குளக்கரையில் அமைந்துள்ள அபி முகேஸ்வரர் ஆலயத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்தநான்கு நபர்கள் ,
தைவான் நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், இயற்கை பேரிடர்களில் இருந்து அந்நாட்டு மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கிலும்மகா ருத்ர யாகம் இன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டு தைவான் நாட்டிலிருந்து வந்திருந்த அந்நாட்டு மக்கள் சில கோரிக்கைகளுக்காக அபிமுகேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினர் .

அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறியதால் அதற்கு நன்றி கடனாக இன்று தைவான் நாட்டைச் சேர்ந்த 4 நபர்கள் அபிமுகேஸ்வரர் ஆலயத்தில் மகா ருத்ர யாகம் நடத்தினர் . இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பழங்கள் பயன்படுத்தப்பட்டன.

தாய்வான் நாட்டைச் சேர்ந்த மக்கள் மகா ருத்ர யாகம் நடத்துவதை பார்வையிட ஏராளமான பக்தர்கள் அபிமுகேஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

error: Content is protected !!
Secret Link