கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அருகேசரியாக தேர்வு எளிதாக விரக்தியில்
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
திருச்சியை அடுத்த லால்குடி மேட்டுப்பட்டி மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தீபக் (வயது 17) இவர் குமுலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் கடந்த 24 -ம் தேதி நடைபெற்ற தேர்வை அவரால் சரியாக எழுத முடியவில்லை.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான தீபக் யாரும் எதிர்பாராத வகையில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது பற்றி அவரது தந்தை சாமிநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே கூலித் தொழிலாளி திடீர் தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி தச்சங்குறிச்சி டி மேட்டூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது இக்பால் (57)தின கூலி தொழிலாளி இவருக்கு திடீர் வைத்து வலி ஏற்பட்டது
இதையடுத்து அவர் அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.
இருந்தபோதிலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த முகமது இக்பால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராத வகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது மனைவி சமீமா பானு கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
