Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

சென்னை: பல்லாவரம் அடுத்த சங்கர்நகர் அருகே மேற்க்கு வங்கத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்த வடமானில இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி, அப்துல் கலாம் தெரு அருகே உள்ள காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சங்கர் நகர் காவல் ஆய்வாளர் ராஜசேகர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிபடை போலீசார் காலி மைதானத்தஒ கண்காணித்த போது சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த வடமாநில நபரை பிடித்து சோதனை செய்த போது சிறு கஞ்சா பொட்டலஙகள் இருப்பதை கண்டுபிடித்தனர்,

பின்பு நடத்திய விசாரனையில் மேற்க்கு வங்கத்தை சேர்ந்த அபாசருல் ஹோக் (வயது 36) என்பதும் நாகல்கேணி பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதும் கூடுதலாக பணம் சம்பாரிக்கும் நோக்கத்தில் அவ்வபோது மேற்க்கு வங்காளம் சென்று கஞ்சா கடத்தி வந்து கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புகொண்டதை அடுத்து,வழக்கு பதிவு செய்த போலீசார் அபாசருல் ஹோக் மறைத்து வைத்திருந்த 2 கிலோ 240 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!