Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானுக்கு 212 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

பாகிஸ்தானுக்கு 212 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

ஜப்பானில் ஆசிய விளையாட்டு ஆண்கள் கிரிக்கெட் (‘டி-20’) பைனல் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சூர்யவன்ஷி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அசத்தினார். மற்றொரு வீரரான இஷான் கிஷன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பாகிஸ்தானுக்கு 212 ரன் இந்தியா இலக்கு நிர்ணயித்தது.

சாஹிப்சாதா ஃபர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், வாசிம் ஜூனியருக்கு பதிலாக சாத் மசூத் சேர்க்கப்பட்டு ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதேவேளையில், இந்திய அணி எந்தவித மாற்றமும் இன்றி களம் கண்டது. பாகிஸ்தான் அணியில் சாஹிப்சாதா ஃபர்ஹான், முவாஸ் சாதாகத், சைம் அயூப், உஸ்மான் கான், ஹசன் நவாஸ், அப்துல் சமத், அராஃபத் மின்ஹாஸ், அகமது தானியால், அப்ரார் அகமது, சுஃபியான் முகீம் மற்றும் சாத் மசூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, போட்டிக்கான டாஸ் நிகழ்வின் போது, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் (விளையாட்டுத் தர்மம்) கொள்கைக்கு மாறாக, பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!