திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சின்னாளப்பட்டியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரி ஜெகவீரபாண்டியன் வீட்டில் நேற்று அதிகாலை நடத்திய சோதனையில், அவரது மகள் பெயரில் ரூ.1.50 கோடிக்கு தங்க நகை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. பணிக்கு செல்லாத மகள் பெயரில் இவ்வளவு பெரிய தொகைக்கு நகை வாங்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 2019 – 2026 வரை வாங்கப்பட்ட நகைகள் வங்கி லாக்கரில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரசீதுகளையும், வங்கி லாக்கருக்கான சாவியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.1.50 கோடிக்கு நகை: ஜெகவீரபாண்டியன் வீட்டில் சோதனை
