Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு

குளித்தலை அருகே கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு

குளித்தலை அருகே கோவிலில் சுவாமி கழுத்தில் இருந்த நகை, உண்டியல் பணம் திருட்டு… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

நேற்று இரவு கோவிலின் பின்புறம் உள்ள சுவர் வழியாக முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்துள்ளார்.

பின்னர், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை திசை திருப்பிய அந்த நபர், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் பூட்டு மற்றும் கதவுகளை உடைத்து கருவறைக்குள் நுழைந்துள்ளார்.

அங்கு அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 4 கிராம் தங்கச் சங்கிலியையும், உண்டியலில் இருந்த சுமார் 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

அதிர்ச்சி அளிக்கும் வகையில், இதே கோவிலில் கடந்த மாதம் 6-ம் தேதியும் திருட்டு நடைபெற்றுள்ளது.

அப்போது மர்ம நபர் ஒருவர் கோவில் பூட்டை உடைத்து, கருவறை சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியையும், உண்டியலில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஒரே கோவிலில் திருட்டு நடைபெற்று வருவது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளுடன் லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!