உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் திருமணமான அருண் குமார் (25) என்ற இளைஞர், தன்னுடன் பழகிய ஹனி என்ற மாணவியை நேரில் பேசுவதாக கூறி வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இருவருக்கும் இடையே 2 மாதங்களுக்கு முன்பு பிரேக்கப் ஆனதால் மன உளைச்சலில் இருந்த அருண், ஹனியை சந்திக்க திட்டம் தீட்டி இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை சுட்டுக் கொன்று காதலன் தற்கொலை!-பரிதாபம்
