Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை மாணவர் தற்கொலை – சாதிய பாகுபாடு என உதயநிதி கண்டனம்!

கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்’ என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக பாகுபாட்டை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொ* செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் மாணவனின் பெற்றோர்கள் உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள காவல்துறை, இதுவரை மாணவனின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யவில்லை.

error: Content is protected !!