கரூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில், திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,

தலைமைக்கழகப் பிரதிநிதிகளான தலைமைத் தணிக்கைக்குழு உறுப்பினர் முகமது சகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் நகரக் கழகச் செயலாளர் பிரபாகரன்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிர்வாகச் சீரமைப்பு தீர்மானத்தின்படி, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நிர்வாக அமைப்புகளுக்கு, தலைமைக்கழகப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், நெசவாளர் அணிச் செயலாளர் பரணி கே.மணி, கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் கரூர் முரளி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சூரியனூர் அ.சந்திரன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி பி.சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
