Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட ரவுடி கும்பல் கைது…

தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை- நண்பர் வெறிச்செயல்

திருச்சி காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது போலீசார் ஜீப்
ஏ பி நகர் ஜங்ஷன் பகுதியில் சென்ற பொழுது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்றுக் கூடி நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர் இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் வடக்கு தாரா நல்லூர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 37) அண்ணா நகர் பகுதி சேர்ந்த இளவரசன் (வயது 27) இபி ரோடு பகுதியை சேர்ந்த தாஸ் (வயது 27) காந்தி மார்க்கெட் சூரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (வயது 25) படையப்பா (வயது 26) என்பதும்,இவர்கள் ஐந்து பேர் சேர்ந்து கொள்ளையடிக்கும் நோக்கில் திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் இளவரசன் தாஸ் ஆகிய மூன்று பேர்களை கைது செய்து உள்ளனர். இவர்கள் ரவுடி பட்டியலில் உள்ளனர்.மேலும் இந்த கும்பலிடம் இருந்து இரும்பு ராட் நைலான் கயிறு உருட்டு கட்டைகள் சில்லி பவுடர் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

error: Content is protected !!