குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை, தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் குத்திக் கொலை, திருவைகுண்டத்தில் காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது என்று திமுக எம்.பி., கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தவெக அரசு எத்தனை உயிர்ப்போனாலும் நடவடிக்கை எடுக்காது. முதலமைச்சர் விஜய், மக்கள் மீது கருணைகாட்டி எதேனும் வேலைப்பார்க்க தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டமே கொலைக்களமாக மாறிவிட்டது – கனிமொழி விமர்சனம்

Tags:தூத்துக்குடி (tag)