தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதற்காகத் தனது 14 வயது மகள் சுவர்ச்சலாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மகள் சொல்வதைக் கேட்காத ஆத்திரத்தில் கொலை செய்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார்.
செல்போன் பயன்படுத்திய மகளைக் கொன்ற தாய்- தற்கொலை நாடகம் அம்பலம்
