ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருகிறது; தவறு செய்தவர்கள் நிச்சயமாக அதற்கான பலனை அனுபவிப்பார்கள் – அமைச்சர் ரமேஷ் பேட்டி.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசுெம்பொன்

முத்துராமலிங்கத் தேவர். வீரத்தையும் தியாகத்தையும் ஆன்மீகத்தையும் முன்னிறுத்திப் பணியாற்றிய அம்மாபெரும் தலைவருக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாவட்டப் பொறுப்பு அமைச்சராகிய நானும் சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக்

கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம்.
முதலமைச்சர் சென்னை நகரில் இருந்து தலைவர்களுக்கு தொடர்ந்து மரியாதை செலுத்தி

வருகிறார். எல்லா தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர் நம் தலைவர். இதை வைத்து சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், தேவர் ஐயாவை பின்பற்றுபவர்கள் அனைவரும் தற்போதைய அரசின் நல்லாட்சியை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் அவருக்கு நிம்மதி இல்லை. மக்கள் இந்த ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாகவும், முதலமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டியும் வருகிறார்கள்.
மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் மீது மட்டுமே சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருகிறது; தவறு செய்தவர்கள் நிச்சயமாக அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.
முந்தைய திமுக ஆட்சியில் உருவான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும், போட்ட விதைகளையும் தான் நாங்கள் தற்போது களையெடுத்து சரிசெய்து வருகிறோம். அதேபோல், விலைவாசியை கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
