Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை ஏர்போட்டில் ரூ.1.15 கோடி தங்கம் கடத்திய பெண் கைது!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்துச் சுங்கத்தீர்வை ஏய்த்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.15 கோடி மதிப்பிலான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பீளமேட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
​இந்நிலையில், திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு (CIU) அதிகாரிகளுக்குக் கிடைத்த

இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று (02.11.2026) ஷார்ஜாவில் இருந்து ‘G-9410’ என்ற ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவரை அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாகச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், அப்பெண்மணி தனது உள்ளாடைக்குள் (Undergarments) மறைத்து வைத்துத் தங்கத்தைக் கடத்தி வந்தது அம்பலமானது.
​அவரிடம் இருந்து
​808.27 கிராம் எடை உள்ள 24K தங்கம் பேஸ்ட் (Paste Form) வடிவில் மீட்கப்பட்டது.
​பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேசச் சந்தை மதிப்பு ரூ. 1.15 கோடி எனச் சுங்கத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர்.
​
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைக் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தைக் கடத்தி வந்த அந்தப் பெண் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​அவருக்குப் பின்னணியில் சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல் ஏதேனும் உள்ளதா ? கோவையில் இந்தத் தங்கத்தைப் பெற யார் ? வரவிருந்தார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!