சென்னை, நவம்பர் 3: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக விஜயபாஸ்கர் வரும் வெள்ளிக்கிழமையும், அவரது மனைவி ரம்யா அடுத்த வாரமும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
