கோவை, திருச்சி ரோடு அருகே உள்ள வெங்கடலட்சுமி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வரும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) முரசொலி வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை மர்ம நபர் திருடிச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினரான முரசொலி அவர்கள், கடந்த 5 மாதங்களாகக் கோவை வெங்கடலட்சுமி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் இவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் ஒருவன் சாதுரியமாகத் திருடிச் சென்று உள்ளான்…
