ஆந்திர மாநிலம் அருகே நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். நவம்பர் 2-ம் தேதி ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கிச் சென்றபோது முரசு புயலில் சிக்கி படகின் என்ஜின் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. படகு கவிழ்ந்து விபத்த்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் காசிமேடு, திருவொற்றியூரைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் கடலூரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
முரசு புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 9 பேர் பலி
