கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதற்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு அரசு விளக்க மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், “கருணை அடிப்படையில் பணி வழங்கியதில், அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி.
“அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை” என அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில்.
“மாற்றம் இல்லையென்றால் எதற்காக விளக்க மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோருகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 4 வார காலம் அவகாசம் அளித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.
