Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிராம்பட்டினம்- சுற்று வட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை

அதிராம்பட்டினம்- சுற்று வட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் தற்போது சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து லேசான தூரல் மழை பெய்யத் துவங்கியது.

தூரல் மழையாக பெய்ய தொடங்கி சில நிமிடங்களுக்கு பிறகு பலத்த மழையாக மாறி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள் மற்றும் தனியார் பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. அதேபோல் நீர்வழித்தடங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயிருந்த நிலையில் அந்த வழித்தடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நகரின் முக்கிய சாலை பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை வடியவைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு துரிதமாக செயல்பட்டதுடன், மழை நீரை வடிய வைத்தனர். இதனால் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது அங்கு பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிராம்பட்டினம் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

error: Content is protected !!