உச்ச நீதிமன்றத்தின் ஒரு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 1980-ஆம் ஆண்டு முதலே இந்தக் கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தென்னிந்திய மக்கள் நீதித் தீர்வுகளுக்காக டெல்லி வரை செல்ல வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க முதல்வர் கடிதம்!
