கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட பின்னர் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பெரியார் அறிவுலகத்தை திறந்து பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகமான கூட்டம் இருந்ததால் முழுமையாகப் பார்வையிட முடியவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை வர வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதனை மாற்றுவதற்கு இளைஞர்கள் இதுபோன்ற நூலகங்களுக்கு வந்து புத்தகங்களைப் படித்து அறிவைப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இதுபோன்ற நூலகங்கள் இனி உருவாக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நூலகங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
கோவை பெரியார் அறிவுலகத்தின் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்திருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அதற்கு மூடு விழா நடத்தியிருப்பார்கள் என விமர்சித்தார்.
மேலும், மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் நூலகப் பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
