பெண்கள் புரட்சியை தமிழ்நாட்டில் பார்த்ததில்லை… ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே பெண்கள் புரட்சி வெடிக்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுன்
கோவையில் அறிவுலக புத்தக கொள்முதலில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்
சென்னை கலைவாணர் அரங்கத்தில், இன்று 1,276 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.117.07 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உணவுப் பொருள் மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் வெங்கடரமணன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
எதற்கு எடுத்தாலும் நாங்க பண்ணிய திட்டம் என்கிறார்கள் உங்க வீட்டு பணத்தில்தான் கட்டியதா ? மக்கள் வரிப்பணத்தில் கட்டிய திட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் போய் திறந்து வைத்தார்…
இன்றைக்கு அண்ணன் பெருமாள் முருகன் அவர்கள் ஒரு கட்டுரை ஒன்று எழுதி இருக்கிறார் சிந்தை என்ற ஒரு தளத்தில் வந்துள்ளது.. அது என்ன கட்டுரை என்று பார்த்தேன்… ஒரு பக்கம் வேதனையாவும் இன்னொரு பக்கம் சிரிப்பாவும் இருக்கு
பெரியார் நூலகத்தில் ஊழல் நடந்துள்ளது
ஒரு சின்ன வாசகர் இலக்கிய வட்டத்தில் இருக்கணும் தெரியும் ஆனா அதுல இருக்குற எழுத்தாளர்கள் பெயர் நான் வாழ்க்கையில் கேள்விப்பட்டதில்லை அது ஒரு பதிப்பகம் அந்த ஒரு பதிப்பகத்தில் கிட்டத்தட்ட 1500 நூல்கள் வாங்கி இருக்கிறார்கள் அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் இல்லை ஆச்சரியமா இருக்கு
சரி எப்போ வாங்கி இருக்காங்கன்னு பார்த்தா பிப்ரவரி மாசம் யார் ஆட்சி எப்போ? ஸ்டாலின் ஆட்சியில் பெரியார் நூலகத்தில் நடந்திருக்கும் ஊழல் கடந்த ஆட்சியில் திமுகவில் நடந்திருக்கக் கூடிய ஒரு மெகா ஊழலினுடைய ஒரு எடுத்துக்காட்டு..
பெரியார் பெயர போய் ஊழல் பண்ணிருக்கீங்களே சார் உங்களுக்கு வெக்கமாவே இல்லையா சார் எப்படி சார்
ஊழல் ஊழல் திரும்பிய திசை எல்லாம் ஊழல் இது எல்லாத்தையும் மன்னித்து விடுவேன் பெரியாரின் பெயர் வைத்த நூலகத்தில் ஒரு ஊழல் நடந்திருக்கு பாருங்க திமுகவினுடைய இந்த பெரியார் நூலாக ஊழலை என் தலைவர் ஸ்டைல்ல சொன்னா தொடமாட்டோம் தொட்டவர்களும் விடவே மாட்டோம் விசாரணை தொடங்குகிறது யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை கொண்டு வந்து சட்டத்தின் முன்னால் நிறுத்தி நீதி நிலைநாட்டப்படும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடைப்பேச்சு
தற்போதைய கட்டமைப்புகள் அனைத்தும் ஆண்களை மையப்படுத்தியே இருப்பதாகவும், சமையல் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் வட்டி வசூலிக்கும் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண்களின் உடலைப் பார்த்து விமர்சனம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மதுவை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் நோக்கம் என்றும், அமைச்சர்களாக இருக்கும் தங்களுக்கு மதுபான ஆலைகள் கிடையாது என்றும் கூறினார்.
தொடர்ந்து, 50 ஆண்டுகளாக நிலவி வரும் சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்சினைகளைச் சரிசெய்ய அரசுக்கு அவகாசம் தேவை எனத் தெரிவித்தார்.
அடுத்த மழைக்காலத்திற்குள் சென்னையில் உள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாகச் சீரமைக்கப்படும் என்றும், மாநகராட்சி ஆணையர் நேர்மையாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காகத் தாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் கூறினார்.
போலியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தால் அரசுப் பணிகளைச் செய்ய முடியாது என்றும் விமர்சித்தார்.
மேலும், இடைத்தேர்தலில் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், அரசின் பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஆட்சியைக் கலைத்துவிடுவேன் என சிலர் கூறுவது குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுன், “ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள்.. அடுத்த நாளே தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும். பெண்கள் சாலைக்கு வந்து நிற்பார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், இது விஜய் ஆட்சி அல்ல, பெண்களின் ஆட்சி என்றும், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற பயம் தங்களுக்கு இல்லை என்றும் கூறிய அவர், பெண்கள் மத்தியில் அரசுக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதுதான் தங்களது கவலை எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது
பெரியார் நூலகத்தில் சம்பந்தம் சம்பந்தமில்லாத புத்தகங்கள், சரியான வரன்முறைகளை பின்பற்றாமல் அப்ப புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி இருப்பதில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டி இருந்தார். உடனே இது குறித்து துரிதமாக விசாரிக்கப்பட்டதில் கடந்த திமுக ஆட்சியில் இந்த ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த ஊழல் குறித்து முறைப்படி விசாரணை நடத்த உத்தரவிட போகிறோம் பெரியார் பெயரில் இப்படி ஒரு ஊழல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் நிறைய நூலகங்களை கட்டினது நாங்கள் தான் என திமுகவினர் பெருமை கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நிறைய நூலகங்கள் கட்டினது நாங்கள் தான் என்பது போன்று தமிழ்நாட்டில் நிறைய ஊழல் செய்ததும் நாங்கள்தான்(திமுக) என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் வரிப் பணத்தை வைத்து இதில் மிகப்பெரிய மோசடி நடந்து இருக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாது யார் அதிக நூலகங்களை கட்டினார்கள் என்பது முக்கியமல்ல யார் வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வருகிறார்கள் என்பது தான் முக்கியம் இந்த விவகாரத்தில் முறைப்படி விசாரணை நடைபெற்று தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் அதிக நூலகங்கள் திறக்கப்பட உள்ளது ஆகையால் இது குறித்து ஆய்வுகள் நடத்த உத்தரவிட்டு உள்ளேன். அங்கே ஏதும் செவ்வாய் கிரகத்தின் புத்தகங்களை ஏதும் கொண்டு வந்து வைத்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது ஆகையால் இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
அரசியலுக்காக எதையாவது ஒன்றை முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்லிக் கொண்டு வருகிறார் அவர் மூத்த அரசியல்வாதி. அவர் மேடைப் பேச்சாளர்கள் போன்று பேசுவது பார்க்கவே வருத்தமாக இருக்கிறது.
